7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` என்று ' எண்ணுஞ் சொல்

260விழைவின் தில்லை தன்னிடத் தியலும்.
 

` அப்பான் மூன்றே தில்லைச் சொல் ' என்று சொல்லப்பட்ட மூன்றனுள், விழைவின்கண் வருந் தில்லை தன்மைக்கணல்லது வாராது ; எ - று .

தன்மைக்கண் வருதல் மேற்காட்டப் பட்டனவற்றுள்ளும் பிறாண்டுங் கண்டுகொள்க, இடம் வரையறுத் தோதாமையின், விழைவின் றில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்டதனைப் பின்னுங் கூறினார், ஏனையிடத்து வாராதென்று நியமித்தற்கென்பது.

(12)