7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` ஏ ' ` ஓ ' சொற்களுக்கு மேலும் ஒரு முடிவு

261தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப.
 

தெளிவின்கண் வரும் ஏகாரமுஞ் சிறப்பின்கண் வரும் ஓகாரமும் அளபான் மிக்க இசையை யுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் ; எ - று.

அளபெடையாய் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும் பிறாண்டுங் கண்டு கொள்க.

(13)