7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` எற்று ' என்னுஞ் சொல்

263எற்றென் கிளவி இறந்த பொருட்டே.
 

எற்றென்னுஞ் சொல் இறந்த பொருண்மைத்து; எ- று.

எ - டு : ` எற்றென் னுடம்பி னெழினலம்' என்பது என்னல மிறந்த தென்னும் பொருள்பட நின்றது, ` ஏற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன் ' என்பதூஉம் இது பொழுது துணிவில்லாருட் டுணிவில்லாதேன்யான் என்று துணிவிறந்த தென்பதுபட நின்றது.

(15)