7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` அந்தில் ' என்னுஞ் சொல்

267அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்று
ஆயிரண்டாகும் இயற்கைத் தென்ப.
 

அந்திலென்னுஞ்சொல் , ஆங்கென்னும் இடப்பொருளுணர்த்துவதும் அசைநிலையுமென இரண்டாம்; எ - று.

எ - டு : ` வருமே - சேயிழை யந்திற் கொழுநற் காணிய ' ( குறுந் - 293) என்புழி ஆங்கு வருமென்றவாறாம். `அந்திற்-கச்சினன் கழலினன்' (அகம் -76) என வாளாதே அசைத்துநின்றது.

(19)