7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`எல் ' என்னுஞ் சொல்

269எல்லே இலக்கம்1
 

எல்லென்பது உரிச்சொ னீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான், இடைச்சொல்லென்று கோடும் .

` எல்வனை ' (புறம் - 24) என எல்லென்பது இலங்குதற்கண்வந்தவாறு.

(21)

1. இலக்கணக்கொத்து நூலாசிரியர், எல்லே விளக்க மெனப் பாடம் கொண்டுள்ளனர். சொல்லதிகாரம் ஒர் ஏட்டுப் பிரதியில் எல்லேயிரக்கமெனப் பாடங்கோடற் கேதுவுண்மையின் சிலர் இரக்கமெனப் பாடங் கொண்டு ` எல்லேயிளங்கிளியே ' எனத் திருப்பாவையில் வரும் இப்பகுதியை யுதாரணமாகக் காட்டுகின்றனர் இப்பாவை யுரை யாசிரியர் ` எல்லே ' என்பதற்கு என்னே யெனப் பொருள் கொண்டுள்ளனர்.