ஆரைக்கிளவி அசைநிலையாமிடமறிக ; எ - று. எ - டு : `பெயரினாகிய தொகையுமா ருளவே,' ( சொல் - 67) எனவும், `எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே' (எழுத்து - 61) எனவும் வரும். ஆகுவழியறித லென்றதனால், அசைநிலையாங்கால் உம்மை முன்னரும், உம்மீற்று வினைமுன்னரு மல்லது வாராமை யறிக. சிறுபான்மை பிறாண்டு வருமேனுங் கொள்க. (23) |