சிறப்பிலக்கணம்
` மா ' என்னுஞ் சொல்
மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசை நிலையாய் வரும்; எ - று.
எ - டு : ` புற்கை யுண்கமா கொற்கை யோனே ' என வரும்.