மியா முதலாகிய ஆறும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச்சொல்லாம்; எ -று . எ - டு : கேண்மியா சென்மியா எனவும், ` கண்பனி யான்றிக வென்றி தோழி ' எனவும், ` காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ' (குறுந் - 2) எனவும், ` உரைமதிவாழியோ வலவ ' எனவும், ` மெல்லம் புலம்ப கண்டிகும்' எனவும், ` காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை ' (அகம் - 7) எனவும் வரும். (26) |