மேற்கூறப்பட்ட ஆறனுள், இகுமுஞ் சின்னும் படர்க்கைச் சொல்லோடுந் தன்மைச்சொல்லோடும் பொருந்து நிலையுடையவென எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தவாறு. எ - டு : ` கண்டிகு மல்லமோ ' (ஐங்குறு - 121) எனவும், ` கண்ணும் படுமோ வென்றிசின் யானே ' ( நற் - 61) எனவும், தன்மைக்கண் வந்தன. ` புகழ்ந்திகு மல்லரோ பெரிதே ' எனவும் `யாரஃ தறிந்தசி னோரே' (குறுந் - 18) எனவும் படர்க்கைக்கண் வந்தன. (27) |