7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` அம்ம ' என்னுஞ் சொல்

276அம்மகேட் பிக்கும்.
 

அம்மவென்னு மிடைச்சொல் ஒருவனை ஒருவன் ஒன்று கேளென்று கொல் லுதற்கண் வரும்; எ - று.

எ - டு : ` அம்ம வாழி தோழி ' (ஐங் - 21) என வரும்.

மியா இக முதலாகிய அசைநிலை ஒரு பொருளுணர்த்தா வாயினும் முன்னிலைக் கணல்லது வாராமையான் அவ்விட முணர்விக்குமாறு போல அம்ம வென்பதூஉம் ஒரு பொருளுணர்த்தாதாயினும் ஒன்றனைக் கேட்பிக்குமிடத் தல்லது வாராமையான் அப்பொருளுணர்விக்கு மென்பது விளக்கிய, கேட்பிக்கு மென்றார்.

(28)