யா முதலாகிய ஏழிடைச் சொல்லும் அசைநிலையாம் ; எ - று. எ - டு : `யா பன்னிருவர் மாணாக்கருள ரகத்தியனார்க்கு' எனவும், `புறநிழற்பட்டாளோ விவளிவட்காண்டிகா' எனவும், `தான் பிறவரிசை யறிதலிற்றன்னுந் தூக்கி '( புறம் - 140) எனவும், ` அதுபிறக்கு ' எனவும், `நோதக விருங்குயி லாலுமரோ' (கலி 33) எனவும், `பிரியின் வாழா தென்போதெய்ய ' எனவும், ` விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நெஞ்சே ' (நற்றிணை - 178 ) எனவும் வரும். இடம் வரையறாமையின் இவை மூன்றிடத்திற்கு முரிய. ஆங்கவும் ஒப்பில்போலியும் உரை தொடங்குதற்கண்ணும் ஆதரமில் வழியும் வருதலின் வேறு கூறினார். (31) |