ஆக, ஆகல், என்பது என்னு மூன்றிடைச் சொல்லும், அசைநிலையாங்கால், இரட்டித்து நிற்கும்; எ - று. பிரிவிலசைநிலை யெனவே, தனித்து நின்று அசைநிலை யாகாவென்பதாம். ஒருவன் யானின்னேன் என்றானும், நீயின்னை என்றானும், அவனின்னன் என்றானும் கூறியவழிக் கேட்டான் ஆக ஆக, ஆகல் ஆகல் என்னும்; இவை உடம்படாமைக்கண்ணும் ஆதரமில்வழியும் வரும். ஒருவனொன்றுரைப்பக் கேட்டான் என்பது என்பது என்னும். அது நன்குரைத்தற் கண்ணும் இழித்தற்கண்ணும் வரும். பிறாண்டுவரினும் வழிக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. (32) |