இரண்டு மாத்திரையை யுடைத்தாய மொழிக் கீறாகா தெனப்பட்ட ஒளகாரம் , பிரிவிலசைநிலையென மேற்கூறப்பட்டனபோல இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டியாது அளபெடையாய் நிற்குமிடத்தும் . அளபெடையின்றித் தான் வருமிடத்தும் பொருள் வேறுபடுதலுள ; அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகு மோசைவேறு பாட்டாற் புலப்படும் ; எ-று. பொருள் வேறுபாடான வழக்கு நோக்கச் சிறப்பும் மாறு பாடுமாம். எ - டு : ஒள ஒளவொருவன் றவஞ் செய்தவாறு என்ற வழிச் சிறப்புத் தோன்றும் , ஒரு தொழில் செய்வானை ஒளஒள வினிச்சாலும் என்றவழி , மாறுபாடு தோன்றும் . ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்த வாறு . ஒள உவினி வெகுளல் எனவும் ; ஒளவவன் முயலுமாறு : ஒளவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத்தும் அளபெடாதும் வந்தவழியும் , அப்பொரு டோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப . பிறபொருள் படுமாயினும் அறிந்து கொள்க. ஈரளபிசைக்கு மென்றே யொழியின் நெட்டெழுத்தெல்லா வற்று மேலும் , இறுதியிலுயிரென்றே யொழியின் எகரவொகரத்து மேலுஞ்சேறலான், `ஈரளபிசைக்கு மிறுதியிலுயிர்' என்றார். இது தத்தங் குறிப்பிற் பொருள் செய்வதாயினும் அடுக்கி வருதலுடைமையான் ஈண்டு வைத்தார். (33) |