7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`உம்' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு.

283எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையுந்
தத்தமுள் மயங்கும் உடனிலை யிலவே.
 

இனி , மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படுமிலக்கண வேறுபாடுணர்த்துகின்றார்.

எச்சவும்மை நின்றவழி எஞ்சு பொருட்கிளவியாம் எதிர்மறையும்மைத் தொடர் வந்து தம்முண் மயங்குதலில்.எ - று.

எ - டு : சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் எனின் இயையாமை கண்டுகொள்க.

ஏனையும்மையொடு மயங்குதல் விலக்காராயிற் றென்னையெனின் : - அவை எஞ்சுபொருட் கிளவியவாய் வாராமையி னென்பது.

(35)