முற்றும்மை யடுத்து நின்ற தொகைச்சொல்லிடத்து எச்சச்சொல் லுரித்துமாம் ; எ - று. எ - டு : பத்துங்கொடால் , அனைத்துங்கொடால் என்புழி முற்றும்மை தம்பொருளுணர்த்தாது சிலவெஞ்சக் கொடு வென்னும் பொருள் தோன்றி நின்றவாறு கண்டுகொள்க. முற்றதலென்னும் பொருளது பண்பு முற்றியவும்மையென ஒற்றுமை நயத்தாற் சொன்மே லேறி நின்றது. உரித்துமாகு மெனவே, எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். ஏற்புழிக்கோட லென்பதனான் எச்சப்படுவது எதிர்மறை வினைக்கணென்று கொள்க. பத்துங்கொடு என்பது பிறவுங் கொடு வென்பது பட நிற்றலின் , விதிவினைக்கண்ணும் எச்சங் குறிக்கு மென்பாரு முளர். இப்பொழுது பத்துங்கொடு என்பது கருத்தாயின், இப்பொழுது பத்துக்கொடு என உம்மையின்றியும் பொருள் பெறப்படும் . பத்துங் கொடு பிறவுங்கொடு என்பது கருத்தாயின். இஃதெச்சவும்மையாகலின் ஈண்டைக் கெய்தாது , அதனான் அது பொருத்தமின் றென்க. இவை மூன்று சூத்திரத்தானும் வழுவற்க வென இடைச்சொற் பற்றி மரபுவழுக் காத்தவாறு. (37) |