உம்மை தொக்கு நின்ற எனாவென்னுமிடைச் சொல்லும் என்றாவென்னு மிடைச்சொல்லும் இரண்டும் எண்ணுமிடத்து வரும் ; எ - று. எ - டு : நிலனெனா நீரெனா எனவும் , நிலனென்றா எனவும் வரும் . உம்மைதொக்க வெனாவென்கிளவி யெனவே ; எனாவு மென அச்சொல் உம்மோடு வருதலுமுடைத்தென்பதாம் . உம்மோடு வந்தவழி அவ்வெண்ணும்மை எண்ணுளடங்கும். எண்ணுவழிப்பட்டன வெனவே, அவை சொற்றொறும் வருதலே யன்றி இடையிட்டும் வருமென்பதாம் . `பின்சாரயல்புடை தேவகை யெனா' (சொல் - 82) எனவும் , ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (சொல் - 72 ) எனவும் இடையிட்டு வந்தவாறு. இவை எண்ணுதற்கண் வாராமையானும் `அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்' ( சொல் - 260 ) எனச் சூத்திரஞ் சுருங்குதற் சிறப்பினானும் அவற்றினை ஈண்டு வைத்தார். (41) |