7.இடையியல்

எண்ணிடைச் சொற்கள்

எண்ணில் வரும் உம்முக்கு . மேலும் ஒரு முடிபு

291உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்.
 

உம்மை யெண்ணின்கண் உருபு தொகுதல் வரையப்படாது ; எ - று.

`பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப' (சொல்-104)

என்னும் பொதுவிதியால் உம்மை யெண்ணின்கண் உருபு தொகல் பெறப்பட்டமையால் , பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டாகலான் உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையப்படாது ; ஏனை யெண்ணின்கண் அவை வரையப்படுமென நியமித்தல் இதற்குப் பயனாகக் கொள்க.

`குன்றி கோபங்கொடிவிடு பவள
மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்'

எனப் பிறவெண்ணின்கண் உருபு தொக்கதா லெனின் ; அற்றன்று செவ்வெண் தொகையின்றி நில்லாமையின் அவற்றையென ஒரு சொல் விரிக்கப்படும் ; விரிக்கவே . குன்றி முதலாயின எழுவாயாய் நின்றனவா மென்பது.

எ - டு : `பாட்டுங் கோட்டியு மறியாப் பயமி
றேக்கு மரம்போ னீடிய வொருவன்'

`இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி' (சொல் - 297) என உம்மையெண்ணின்கண் உருபு தொக்கவாறு கண்டு கொள்க.

வரையா ரென்றதனான் , ஆண்டும் எல்லாவுருபந் தொகாஐயுங் கண்ணுமே தொகுவனவெனக் கொள்க.

யானை தேர் குதிரை காலா ளெறிந்தார் என உம்மையும் உருபும் உடன் றொக்கவழி, உம்மைத்தொகை யென்னாது உருபுதொகை யென்க வென்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரை யாசிரியரெனின் : அஃது உம்மைத் தொகையாதலின் ஒருசொன் னடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும் அத்தொகையிடை உருபின்மை சிற்றறிவினார்க்கும் புலனாம் ; அதனான் அஃதவர்க்கு கருத்தன்மை சொல்லவேண்டுமோ வென்பது.

(43)