1.கிளவியாக்கம்

3.இடம்

படர்க்கைக்குரிய சொற்கள்

30ஏனை யிரண்டும் ஏனை யிடத்த.
 

செலவுச்சொல்லும் கொடைச்சொல்லும் படர்க்கைக்குரிய ; எ-று.

எ - டு: அவன்கட் சென்றான், ஆங்குச் சென்றான், அவற்குக் கொடுத்தான் என வரும்.

செலவு தொழில் படர்க்கையான்கண் சென்றுறு தலானும் கொடைப் பொருளேற்பான் படர்க்கையான் ஆகலானும் ஈற்றானன்றி1 இவ்விருசொல்லும் படர்க்கையிடத்திற்குரிய வாயினவாறு கண்டு கொள்க.

(30)

1. ஈற்றானன்றி - ஈற்றானல்லது முதனிலையால்.