8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`மல்லல்' `ஏ'

303மல்லன் வளனே.
 

`மல்லல் மால்வரை' (அகம்-52) எனவும் `ஏகல் லடுக்கம்' (நற்றிணை-116) எனவும் மல்லலும் ஏவும், வளமும் பெற்றுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

பெற்று-பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றது போலும் இவையிரண்டு சூத்திரம்.

(7)