8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`உகப்பு' `உவப்பு'

305உகப்பே உயர்தல் உவப்பே உவகை.
 

`விசும்புகந் தாடாது' எனவும் `உவந்துவந்தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇய' (அகம்-35) எனவும் உகப்பும் உவப்பும் உயர்தலும் உவகையுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(9)