8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கூர்ப்பு' `கழிவு'

314கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும்.
 

`துனிகூரெவ்வமொடு' (சிறுபாண்-39) எனவும் `கழிகண் ணோட்டம்' எனவும் `கூர்ப்பும்' `கழிவும்' ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பை யுணர்த்தும் என்றவாறு. உள்ளதென்றது முன் சிறவாதுள்ளதென்றவாறு.

(18)