8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`அதிர்வு' `விதிர்ப்பு'

316அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்.
 

`அதிர வருவதோர் நோய்' ( குறள் - 439) எனவும் , `விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை' (புறம் - 20) எனவும் அதிர்வும் விதிர்ப்பும் , நடுக்கமாகிய குறிப் புணர்த்தும் ; எ - று.

அதிழ்வென்று பாடமோதி `அதிழ்கண் முரசம்' என்று தாரணங்காட்டுவாரு முளர்.

(20)