தீர்தலுந் தீர்த்தலு மென்னு மிரண்டும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் ; எ - று. எ - டு : `துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை' (நற்றிணை 10) எனவரும். தீர்த்தல் விடுதற்பொருண்மைக்கண் வந்தவழிக் கண்டு கொள்க. தீர்த்தலென்பது செய்வித்தலை யுணர்த்திநின்ற நிலைமையெனின் :- செய்வித்தலை யுணர்த்து நிலைமை வேறோதின் , `இயைபே புணர்ச்சி' (உரியியல் - 12) என்புழியும் இயைப்பென வேறோதல் வேண்டும் அதனாற் றீர்த்தலுஞ் செய்தலை யுணர்த்துவதோ ருரிச்சொல் லெனவே படு மென்பது. விடற்பொருட்டாகு மென்பதனை இரண்டனோடுங் கூட்டுக. பன்மை யொருமை மயக்க மெனினு மமையும். (22) |