8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`தட' `கய' `நளி' என்பவற்றிற்கு, மேலும் பொருள்

322கயவென் கிளவி மென்மையும் ஆகும்.
 

`தடமருப்பெருமை' (நற்-120), `கயந்தலை மடப்பிடி' (நற்-137), `நளியிருள்'1 எனத் தடவெண்கிளவி முதலாயின, பெருமையேயன்றிக் கோட்டமும் மென்மையுமாகிய பண்பும் செறிவாகிய குறிப்புமுணர்த்தும் ;எ - று.

(26)

1. சிலைப்புவல் வேற்றுத் தலைக்கை தந்துநீ, `நளிந்தனை வருதல்'(பதற்று-52) எனவும் பாடம்.