8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`வம்பு' `மாதர்' `நம்பு' `மே'

328மாதர் காதல்.
 

`வம்புமாரி' (குறுந்-66), `மாதர் நோக்கு நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி' (அகம்-198) `பேரிசை நவிர மேஎ வுறையுங், காரி யுண்டி' (மலைபடு-82) என வம்பும் மாதரும், நிலையின்மையுங் காதலுமாகிய குறிப்புணர்த்தும்; நம்பும் மேவும் நசையாகிய குறிப்புணர்த்தும்; மேவு - நசையாக எ - று.

(32)