`வேனிலுழந்த வறிதுயங் கோய் களிறு' (கலி-9), `பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை' (கலி-99) `நிழத்த யானை மேய்புலம் படர' (மது3-03), `கயலறலெதிரக் கடும்புனற் சாஅய்' (நெடுநல்-18) என ஓய்தன் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ஆய்ந்த தானை - பொங்குதல் விசித்தலானுணுகிய தானை. 1உள்ள தென்றது முன்னுணுகாதுள்ளது,எ - று. (34)
1 `வீய்தலா னுணுகிய தானை' எனவும் பாடம். |