8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`புலம்பு' `துவன்று' `முரஞ்சல்' `வெம்மை'

331புலம்பே தனிமை.
 

`புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி' (அகம்-7) எனவும், `ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்' (நற்-170) எனவும் `சூன்முரஞ் செழிலி' எனவும், `வெங்காமம்' (அகம்-15) எனவும் , புலம்பு முதலாயின தனிமையும் நிறைவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்புமுணர்த்தும்; எ - று.

(35)