8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`பொற்பு' `வறிது' `ஏற்றம்'.

336வறிதுசிறி தாகும்.
 

`பெருவரை யடுக்கம் பொற்ப' (நற்-34) எனவும், `வறிதுவடக் கிறைஞ்சிய' (பதிற்-24) எனவும், `கானலஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி' (குறுந் - 145), `எற்றேற்றமில்லாருள் யானேற்றமில்லாதேன்' எனவும் பொற்பு முதலாயின முறையானே பொலிவும் சிறிதென்பதூஉம் நினைவும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(40)