8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`பிணை' `பேண்'

338பிணையும் பேணும் பெட்பின் பொருள.
 

`அரும்பிணையகற்றி வேட்ட ஞாட்பினும்' எனவும், `அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்' (புறம்-99) எனவும், பிணையும் பேணும், பெட்பின் பொருளாகிய புறந்தருதலென்னுங் குறிப்புணர்த்தும்; எ - று.

பெட்பின் பொருள வென்றதனால் பெட்பின் பொருளாகிய விரும்புதலுணர்த்தலுங் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க.

(42)