8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`படர்'

340படரே உள்ளல் செலவும் ஆகும்.
 

`வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி' (புறம்-47) `கறவை கன்று வயிற் படர' (குறுந்-108) எனப் படரென்பது உள்ளுதலுந் செலவுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(44)