8.உரியியல்

சிறப்பிலக்கணம்

விறப்பு என்பதற்கு மேலும் ஒரு பொருள்

348அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.
 

`அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல' (பெரும்பாண் - 229) என விறப்பென்பது செறிவே யன்றி வெருவுதற் குறிப்புமுணர்த்தும் ; எ - று.

(52)