8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கம்பலை' `சும்மை' `கலி' `அழுங்கல்'

349கம்பலை சும்மை கலியே அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள.
 

`கம்பலை மூதூர்' (புறம் 54) எனவும், `ஒரு பெருஞ் சும்மையொடு' எனவும், `கலிகொளாய மலிபுதொகு பெடுத்த' (அகம் - 11 ) எனவும், `உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே' (நற் - 203) எனவும் , கம்பலை முதலாகிய நான்கும் அரவமாகிய இசைப்பொருண்மை யுணர்த்தும் ; எ - று.

(53)