8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`அழுங்கல்' என்பதற்கு மேலும் இருபொருள்

350அவற்றுள்
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.
 

`பழங்க ணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ' (அகம் - 66) எனவும், `குணனழுங்கக் குற்ற முழை நின்று கூறுஞ் சிறியவர்கட்கு' (நாலடி - 353 ) எனவும் , அழுங்கல் அரவமேயன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்புமுணர்த்தும் ; எ - று.

(54)