8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`விழுமம்'

353விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையும்.
 

`விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு' (நாலடி - 159 ) எனவும் , `வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து' (புறம் - 27) எனவும் , `நின்னுறு விழுமங் களைந்தோன்' (அகம் - 140) எனவும், விழுமம் முறையானே சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(57)