8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கருவி' `கமம்'

355கமம்நிறைந் தியலும்.
 

`கருவி வானம்' (புறம் - 159) எனவும், `கமஞ் சூன் மாமழை' (அகம் - 49 ) (குறுந் - 158 ) எனவும், கருவியும் கமமும் தொகுதியும் நிறைவுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு . `கருவிவானம்' என்புழிக் கருவி மின்னு முழக்கு முதலாயவற்றது தொகுதி.

(59)