சிறப்பிலக்கணம்
`துவைத்தல்' `சிலைத்தல்' `இயம்பல்' `இரங்கல்'
`வரிவளை துவைம்ப' எனவும், `ஆமா நல்லேறு சிலைப்ப' (முருகு - 915) எனவும்
`கடிமரந் தடியு மோகை தன்னூர்நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப' (புறம் - 96)
எனவும் , `ஏறிரங்கிருளிடை' (கலி - 46) எனவும், துவைத்தன் முதலாயின இசைப்பொரு ளுணர்த்தும் என்றவாறு.