8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`இரங்கல்' என்பதற்கு மேலும் ஒரு பொருள்

359அவற்றுள்
இரங்கல் கழிந்தபொருட்டும் ஆகும்.
 

`செய்திரங்காவினை' (புறம் - 10) என இரங்கல், இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பு முணர்த்தும் ; எ - று.

கழிந்த பொருள்பற்றி வரும் கவலையைக் கழிந்த பொருளென்றார்.

(63)