1.கிளவியாக்கம்

3.இடம்

இல்லாமைக் குரிய சொல் அமையும் வகை

36அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.
 

அல்லதில் என்பான், பிறிது பொருள் கூறாது அப் பொருள் தன்னையே கூறுமாயின், இப்பயறல் லதில்லை எனச் சுட்டிக் கூறுக; எ-று.

பயறுளவோ என்றவழிச் சுட்டாது பயறல்லதில்லை எனின் பயறுள உழுந்து முதலாயின இல்லை எனப் பிறிது பொருளேற்பித்துச் செப்பு வழுவா மென்பது.

அல்லதில் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

தன்னின முடித்தல் என்பதனால். பசும்பயறல்லதில்லை பெரும்பயறல்லதில்லை எனக் கிளந்து கூறுதலுங்1 கொள்க.

`செப்பும் வினாவும்' (சொல் - 13) என்றதனால் இவ்வேறுபாடு இனிது விளங்காமையானும், ` பொருளொடு புணராச்சுட்டு ' (சொல் - 37) என வழுவமைக்கின்றாராக லானும், இவற்றை விதந்து கூறினார்2

(36)

1. கிளந்து கூறல் - சுட்டாமற் பெயர் சொல்லிக்கூறுதல்.

2. விதந்துகூறல் - சிறப்பாகப் பிரித்துக் கூறுதல்.