`இலம்படு புலவ ரேற்றகைந் நிறைய' (மலைபடு - 576) எனவும் , `ஒக்கலொற்கஞ் சொலிய' (புறம் - 327) எனவும் , இலம்பாடும் ஒற்கமும் வறுமையாகிய குறிப்புணர்த்தும் ; எ - று. இலமென்னு முரிச்சொல் , பெரும்பான்மையும் பாடென்னுந் தொழில்பற்றி யல்லது வாராமையின் இலம்பாடென்றார். (64) |