சிறப்பிலக்கணம்
`பேம்' `நாம்' `உரும்'
`மன்ற மரா அத்த பேமுதிர் கடவுள்' ( குறந் - 87) எனவும், `நாநல்லார்' எனவும் , `உருமில்சுற்றம்' (பெரும்பாண் - 447) எனவும் , பே முதலாகிய மூன்றும் அச்சமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.