சிறப்பிலக்கணம்
`வய' `வாள்' `துயவு'
`துன்னருந் துப்பின் வயமான்' (புறம் - 44) எனவும், `வாண்முகம்' (புறம் - 6) எனவும் , `துயவுற்றேம் யாமாக' எனவும் வய முதலாயின, வலியும் அறிவு வேறுபடுதலுமாகிய குறிப்பும் ஒளியாகிய பண்புமுணர்த்தும்: எ - று.