8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`உயா' `உசா' `வயா'

371வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்.
 

`பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை' (அகம் - 19) எனவும் , `உசாத்துணை' ( குறுந் - 207) எனவும் , `வயவுறு மகளிர்' , (புறம் - 20) எனவும் , உயா முதலாயின , முறையானே உயங்கலுஞ் சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(75)