8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கறுப்பு' `சிவப்பு'

372கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள.
 

`நிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்' எனவும் , `நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம்' (பதிற் - 13) எனவும் , கறுப்பும் சிவப்பும் வெகுளியாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

கறுமை செம்மையென்னாது கறுப்புச் சிவப்பென்றதனான் , தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளி யுணர்த்தாமை கொள்க.

(76)