`கறுத்தகாயா' `சிவந்த காந்தள்' (பதிற் - 15) என அவை வெகுளியேயன்றி நிறவேறுபாடுணர்த்தற்கு முரிய: எ- று. இவை வெளிப்படு சொல்லாயினும் ; கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள வென்றதனால் , கறுங்கண் செவ்வாய் எனப் பண்பாய வழியல்லது தொழிலாயவழி நிறவேறுபாடுணர்த்தா வென்பது படுதலின் , அதனைப் பாதுகாத்தவாறு. (77) |