8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`நொசிவு' `நுழைவு' `நுணங்கு !'

374நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.
 

`நொசிமட மருங்கல்' (கலி - 60) எனவும் , `நுழை நூற் கலிங்கம்' , (மலைபடு - 56) எனவும் , `நுணங்குதுகி னுடக்கம் போல' (நற்றி 15) எனவும் , நொசிவு முதலாயின நுண்மையாகிய பண்புணர்த்தும் ; எ - று.

(78)