8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`மத'

377மதவே மடனும் வலியும் ஆகும்.
 

`பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்' (அகம் - 14) எனவும்; `கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு' (அகம்-36) எனவும், மதவென்பது மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்ததும்; எ - று.

(81)