8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`பரவு' `பழிச்சு'

382பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.
 

`நெல்லுகுத்துப் பரவுங் கடவுளுமிலவே' (புறம் - 335) எனவும் , `கைதொழூஉப் பழிச்சி' (மது - 664) எனவும் , பரவும் பழிச்சும் . வழுத்துதலாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(86)