8.உரியியல்

சிறப்பிலக்கணம்

அதற்கு மேலும் இரு பொருள்

384ஐயமுங் கரிப்பும் ஆகலும் உரித்தே.
 

`கடுத்தன ளல்லளோ வன்னை' எனவும், `கடு மிளகு தின்ற கல்லா மந்தி' எனவும், கடியென்கிளவி மேற்கூறப்பட்ட பொருளேயன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்புங் கரிப்பாகிய பண்பு முணர்த்து தற்கு முரித்து; எ - று.

(88)