`ஐதே காமம் யானே' (நற்றிணை-143) எனவும், `சேற்றுநில முனைஇய செங்கட காரான்' (அகம்-46) எனவும், `வைநுனைப் பகழி (முல்லை-73) எனவும், `போரெறுழ்த் திணிதோள்' (பெரும்பாண்-93) எனவும், ஐ முதலாயின முறையானே வியப்பும் முனிவுங் கூர்மையும் வலியுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று. (91) |