முன்னும் பின்னும் வருபவவை நாடியவழி, உரிச்சொற்குக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிற பொருடோன்று மாயினும், கூறப்பட்ட வற்றோடு அவற்றையுங் கொள்க; எ - று. `கடிநாறும் பூந்துணர்' என்ற வழிக் கடியென்பது முன்னும் பின்னும் வருபவை நாட, வரைவு முதலாயின பொருட்கேலாது மணப்பொருட்டாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (94) |